சின்ன மருமகள் சீரியலில் இருந்து திடீரென வெளியேறியது ஏன்?… தாமரை செல்வி ஓபன் டாக்

சின்ன மருமகள் சீரியலில் இருந்து திடீரென வெளியேறியது ஏன்?… தாமரை செல்வி ஓபன் டாக்


சீரியல்கள்

விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அய்யனார் துணை, சின்ன மருமகள், மகாநதி என வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஒவ்வொரு சீரியலிலும் கதைகள் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அய்யனார் துணையில் வீடு பிரச்சனை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் விவாகரத்து பிரச்சனை, சிறகடிக்க ஆசை சீரியலில் எல்லாமே பிரச்சனை என்பது போல் விறுவிறுப்பான கதைகள் அமைந்து வருகிறது.

இதற்கு இடையில் தான் சின்ன மருமகள் சீரியலில் ஒரு நடிகை மாற்றம் தகவலும் வந்தது.

மாற்றம்


விஜய்யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு தொடர் தான் சின்ன மருமகள். இந்த சீரியலில் நாயகியின் அம்மாவாக பிக்பாஸ் புகழ் தாமரைச்செல்வி நடித்து வந்தார், ஆனால் திடீரென அவர் விலகியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், சின்ன மருமகள் நல்லபடியாகத்தான் போயிட்டிருந்தது, எனக்கு அறிமுகம் கொடுத்து சோறு போட்ட நாடகத்தை விட முடியாது.

சின்ன மருமகள் சீரியலில் இருந்து திடீரென வெளியேறியது ஏன்?... தாமரை செல்வி ஓபன் டாக் | Thamarai About Why She Quit Chinna Marumagal

சின்ன சின்ன ஈவெண்ட், சினிமா வாய்ப்பு, சீரியல் என எல்லாத்தையும் பேலன்ஸ் செய்யற இடத்தில் கொஞ்சம் தடுமாறி ஒரேயொரு நாள் படப்பிடிப்பிற்கு தேதி தர முடியாமல் போனது.
இதனால் உடனே சீரியலில் இருந்து என்னைத் தூக்கிட்டு வேற நடிகரை போட்டுட்டாங்க.

வருத்தம் தான் ஆனால் என்ன செய்வது, இப்போது சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *