சினிமாவில் இருந்து ஓய்வு எடுப்பதா? கமல்ஹாசன் சொன்ன அதிரடி பதில்.. ரசிகர்கள் ஷாக்

சினிமாவில் இருந்து ஓய்வு எடுப்பதா? கமல்ஹாசன் சொன்ன அதிரடி பதில்.. ரசிகர்கள் ஷாக்


கமல்ஹாசன்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் ஜூன் 5 – ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சினிமாவில் இருந்து ஓய்வு எடுப்பதா? கமல்ஹாசன் சொன்ன அதிரடி பதில்.. ரசிகர்கள் ஷாக் | Kamal Haasan Open Talk To Quit Cinema

அதிரடி பதில்

இந்நிலையில், கமல்ஹாசன் சினிமா குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ” சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது ஒரு சக்திவாய்ந்த ஊடகம்.

கதைகள் மூலம் சமூகத்தில் உள்ள குறைகளைச் சரிசெய்யவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நான் எப்போதும் பாடுபடுவேன். இந்தப் பொறுப்பிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன்.

என்னுள் இருக்கும் அந்த தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது, அது அணையும் வரை நான் நடித்துக் கொண்டே இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். தற்போது, இவரின் இந்த பதிலால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

சினிமாவில் இருந்து ஓய்வு எடுப்பதா? கமல்ஹாசன் சொன்ன அதிரடி பதில்.. ரசிகர்கள் ஷாக் | Kamal Haasan Open Talk To Quit Cinema


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *