சர்தார் 2 திரைப்படத்தில் விஜய் பட இயக்குநர்..

சர்தார் 2 திரைப்படத்தில் விஜய் பட இயக்குநர்..


சர்தார்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார். கார்த்தி இப்படத்தில் அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார்.

சர்தார் 2 திரைப்படத்தில் விஜய் பட இயக்குநர்.. அட இவரா | Director Dharani In Sardar 2

குறிப்பாக அப்பா சர்தார் கதாபாத்திரத்தில் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருந்தார். மேலும் இப்படத்தில் ராஷி கன்னா, ரஜிஷா விஜயன், லைலா ஆகியோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது சர்தார் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

சர்தார் 2 திரைப்படத்தில் விஜய் பட இயக்குநர்.. அட இவரா | Director Dharani In Sardar 2

இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் வில்லாதி வில்லன் நடிகர் எஸ். ஜே. சூர்யா இப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளிவந்தது.

சர்தார் 2-வில் தரணி

இந்த நிலையில், இப்படம் குறித்து மற்றொரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இயக்குநர் தரணியும் இணைந்துள்ளாராம். கில்லி, தூள், குருவி என பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் தரணியை பக்கத்தில் வைத்து கொண்டுதான் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். அவர் தன்னால் முடிந்த அட்வைஸை இப்படத்திற்கு கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

சர்தார் 2 திரைப்படத்தில் விஜய் பட இயக்குநர்.. அட இவரா | Director Dharani In Sardar 2

மேலும் இயக்குநர் தரணி இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டபின், அந்த இடமே கலகலப்பாக மாறிவிட்டதாம். கார்த்தி உள்ளிட்ட அனைவரும் அவரை மரியாதையுடன் பார்த்துக்கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *