சமத்துவம் பத்தி நீங்க பேசுறீங்க.. மாரி செல்வராஜை கடுமையாக சாடிய பிரபல நடிகர்

மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதை தொடர்ந்து கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்களை இயக்கினார்.
சமீபத்தில் இவர் இயக்கிய பைசன் படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 18 கோடி வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், மாரி செல்வராஜ் குறித்து பிரபல நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் பேசியது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
ஆர்.எஸ். கார்த்திக் பேச்சு
இதில், “கர்ணன் படத்துல என்னுடைய நண்பர்கள் நடித்தார்கள். திருநெல்வேலி பக்கம் ரொம்ப வெயில் இருக்கும். ஷாட் முடிஞ்ச உடனே ஹீரோ தனுஷ் சார் கேரவன் உள்ள போய்டுவாரு. மத்த நடிகர்கள் நிழலில் நிப்பாங்க, ‘டேய் வாங்கடா வந்து வெயில்ல நில்லுங்க, இவங்க என்ன பெரிய மகாராஜா வீட்டு பிள்ளைங்க’ அப்படின்னு மாரி செல்வராஜ் சொல்லுவாரு. நான் என்ன கேட்குறேன், நீங்க சமத்துவம் பத்தி தான படம் எடுக்குறீங்க. அப்போ ஹீரோவை ஒரு மாதிரியும், சக நடிகர்களை ஏன் ஒரு மாதிரியும் நடத்துறீங்க. முதல்ல ரெண்டுபேரையும் நடிகனா பாருங்க. அப்போ நீங்க எப்படி சமத்துவம் பத்தி பேச முடியும், அப்படிங்கிறது என்னோட கருத்து” என பிரபல நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் பேசியுள்ளார்.
நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் மாநகரம், பீச்சாங்கை, பரோல் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.