சச்சின் படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆகப்போகும் விஜய்யின் ஹிட் படங்கள்… எந்தெந்த படங்கள் தெரியுமா?

சச்சின் படம்
நடிகர் விஜய் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருக்கும் பேவரெட்.
ஆனால் அவர் நடித்த சச்சின் திரைப்படம் அனைவருக்குமே பேவரெட், காரணம் அந்த அளவிற்கு படத்தின் கதைக்களம், விஜய் நடிப்பு, பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் இருந்தன.
இப்போது பழைய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகும் டிரெண்ட் இருக்க சமீபத்தில் இப்படம் ரீ-ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் சச்சின் படத்தை மீண்டும் திரையரங்குகளில் கண்டு ரசித்தார்கள்.
அடுத்த படங்கள்
சச்சின் வெளியாகி நல்ல வசூல் வேட்டையும் நடத்த இப்போது விஜய்யின் இன்னும் 2 படங்கள் ரீ-ரிலீஸ் ஆகப்போகும் தகவல் வந்துள்ளது.
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், விஜய்யின் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த குஷி மற்றும் சிவகாசி படங்கள் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட செய்தியாக அமைந்துள்ளது.