கூலி படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கூலி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் மற்றும் அமீர் கான் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்திலிருந்து அனைத்து பாடல்களும், வெறித்தனமான ட்ரைலரும் வெளியானது. இதில் ட்ரைலர் வெளிவந்தபின் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு இரட்டிப்பு ஆகியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், கூலி படத்தின் ப்ரீ புக்கிங் அமோகமாக வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 14 கோடிக்கும் மேல் வசூல் வந்துள்ளது. இதில் வட அமெரிக்காவில் மட்டுமே ரூ. 9.8 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சென்சேஷனல் துவக்கமாக பார்க்கப்படுகிறது.