கூலி படத்தில் என் ரோல் அப்படி இருக்கும்.. நடிகர் அமீர் கான் சொன்ன முக்கிய தகவல்

நடிகர் அமீர் கான் ஹிந்தி சினிமாவின் முன்னணி முன்னணி ஹீரோக்களில் ஒருவர். சில வருட இடைவெளிக்கு பிறகு அமீர் கான் நடித்து இருக்கும் Sitaare Zameen Par என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் கொடுத்து வருகிறார் அமீர் கான். அதில் தான் தமிழில் அறிமுகம் ஆகும் படம் பற்றியும் பேசி இருக்கிறார்.
கூலி படத்தில் என்ன ரோல்
அமீர் கான் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.
அந்த ரோல் பற்றி பேசிய அவர், ‘கூலி படத்தில் என் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும். அந்த கேரக்டரை எல்லோருக்கும் பிடிக்கும்’ என கூறி இருக்கிறார்.