கூலி அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்த சன் பிக்சர்ஸ்.. லியோவை விட இவ்வளவு அதிகமா

கூலி படம் நேற்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட இடங்களிலும் பெரிய அளவில் டிக்கெட் முன்பதிவு ஆனது.
மேலும் அமெரிக்காவில் ப்ரீமியரிலேயே 3 மில்லியன் டாலர் என்ற மைல்கல்லை கூலி படம் கடந்து சாதனை படைத்து இருந்தது.
சன் பிக்சர்ஸ் அறிவித்த வசூல்
இந்நிலையில் கூலி படம் முதல் நாளில் உலகம் முழுக்க 151 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.
லியோ படம் முதல் நாளில் 148.5 கோடி வசூலித்து இருந்தது. அதை விட 2.5 கோடி ரூபாய் அதிகமாக கூலி வசூலித்து இருக்கிறது.