குறைவான ஓட்டுகள்.. இரண்டாம் வார எலிமினேஷன் இவர்தானா?

பிக் பாஸ் 9ம் சீசனில் கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருந்தார்கள். நந்தினி இடையில் வெளியேறிவிட்ட நிலையில் பிரவீன் காந்தி வார இறுதியில் விஜய் சேதுபதியால் எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றது. அதில் பாரு, கம்ருதின், அரோரா, FJ, அப்சரா, ரம்யா, கெமி, சபரி மற்றும் திவாகர் என மொத்தம் 9 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர்.
எலிமினேஷன் இவரா?
இந்நிலையில் இந்த போட்டியாளர்களில் அப்சராவுக்கு தான் மிக குறைந்த வாக்குகள் வருவதாகவும், அவர் தான் வாரம் எலிமினேட் ஆக போகிறார் என்றும் தெரிகிறது.
வாட்டர்மெலன் திவாகர் மற்றும் சபரி ஆகியோருக்கு தான் அதிகம் வாக்குகளும் வருகிறதாம், அதனால் அவர்கள் முதலில் save ஆக வாய்ப்பிருக்கிறது.