குடும்பத்தினர் அசிங்கப்படுத்தினாலும் தமிழ்ச்செல்வி பிறந்தநாளுக்கு சேது செய்த காரியம்… சின்ன மருமகள் எமோஷ்னல் எபிசோட்

சின்ன மருமகள்
கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் சின்ன மருமகள்.
நன்றாக படித்து மருத்துவர் ஆக வேண்டும் கனவோடு இருக்கும் தமிழ்ச்செல்வி என்ற பெண் தனது அப்பாவின் வற்புறுத்தலால் பணக்கார வீட்டுப் பையனை திருமணம் செய்ய அதனால் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்.
சேது அவள் வயிற்றில் இருப்பது என் குழந்தை இல்லை என அசிங்கமாக கூற அந்த மன உளைச்சலில் உள்ள தமிழ்ச்செல்வி, குடும்பம் ஒன்றும் வேண்டாம் படிப்பு தான் முக்கியம் என வேலை பார்த்துக் கொண்டே படித்துக் கொண்டிருக்கிறார்.
எபிசோட்
இந்த வார புரொமோவில் தமிழ்ச்செல்வி பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட பாட்டி வீட்டில் ஏற்பாடு செய்கிறார். ஆனால் இவளுக்கு எல்லாம் பிறந்தநாள் ஒரு கேடா என வீட்டுப் பெண்கள் ரகளை செய்துவிடுகிறார்கள்.
இதனால் வருத்தம் அடைந்த தமிழ்ச்செல்வி எனக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாததால் வருத்தம் இல்லை என தனது தங்கையிடம் கூறி சமாதானம் செய்கிறார்.
அந்த நேரத்தில் அவருக்கு ஒரு போன் கால் வருகிறது, அதாவது குழந்தைகள் காப்பகத்தில் இருந்து போன் செய்கிறோம், உங்களுக்கு பிறந்தநாள் தானே இன்று வாழ்த்துக்கள்.
உங்களது கணவர் சேது இன்று எங்களது இல்லத்தில் காலை, மதியம், இரவு உணவு வழங்கியிருந்தார் என்கிறார். இதனைக் கேட்டு தமிழ்ச்செல்வி மிகவும் எமோஷ்னல் ஆகிறார்.