குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி… வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ

குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி… வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ


குக் வித் கோமாளி

ஹலோ பாஸ், என்ன டென்ஷனா இருக்கிறீர்களா அப்போது இங்கே வாங்க என்று வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் ஷோ தான் குக் வித் கோமாளி.

முதல் சீசனிற்கே மக்கள் அமோக வரவேற்பை கொடுக்க அடுத்தடுத்து ஒவ்வொரு சீசனும் கொஞ்சம் மாற்றப்பட்ட புதிய கான்செப்டுடன் ஒளிபரப்பாகி வந்தது.

கடந்த வருடம் 6வது சீசன் முடிந்த போதே அடுத்த சீசன் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டனர், அந்த அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரசிக்கிறார்கள்.

இப்போது 7வது சீசனிற்கான புரொமோ எல்லாம் வெளியாகிவிட்டது, இந்த 7வது சீசனின் புதிய நடுவராக நடிகை ரோஜா இணைந்துள்ளார். அதேபோல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஷாலின் ஷோயா இணைந்துள்ளார்.

போட்டியாளர்கள்

அட்டகாசமாக தொடங்கப்போகும் குக் வித் கோமாளி 7வது சீசனின் புரொமோக்கள் எல்லாம் அமோக வரவேற்பு பெற்றுவிட்டது.

கடைசியாக இந்த நிகழ்ச்சியில் போட்டிபோடும் போட்டியாளர்கள் குறித்த புரொமோ வெளியானது. அதில் அய்யனார் துணை சீரியல் புகழ் அரவிந்த் அவரது மனைவியுடனும், பிக்பாஸ் புகழ் கானா வினோத் அவரது மனைவியும் போட்டியிடுகிறார்கள்.

அதேபோல் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா அவரது கணவர், அதோடு சின்னத்திரை நயன்தாரா என கொண்டாடப்படும் நிஷா அவரது கணவருடன் என 4 ஜோடிகள் இந்த 7வது சீசனில் பங்குபெறுகிறார்கள்.

இதோ அந்த புரொமோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *