குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. அதிர்ச்சியில் கண்கலங்கிய கோமாளிகள்

ரசிகர்களின் அனைவரின் மனதில் இடம்பிடித்த குக் வித் கோமாளி சீசன் 6ல் இந்த வாரம் எலிமினேஷன் சுற்று நடைபெற்றது.
இதற்கு முன் நடந்த எலிமினேஷன் சுற்றுகளில் சௌந்தர்யா, கஞ்சா கருப்பு மற்றும் சுந்தரி அக்கா ஆகியோர் வெளியேறினார்கள்.
நான்காவது எலிமினேஷன்
இந்த மூன்று எலிமினேஷனை தொடர்ந்து இந்த வாரம் நான்காவது எலிமினேஷன் நடந்தது. இதில் ஷபானா, மதுமிதா மற்றும் நந்தகுமார் ஆகியோர் டேஞ்சர் சோனில் இருந்தனர். இதில் குறைவான மதிப்பெண்களை பெற்று இருந்த மதுமிதா இந்த வாரம் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறியுள்ளார்.
கண்கலங்கிய கோமாளிகள்
இது அங்கிருந்த சக போட்டியாளர்கள், கோமாளிகள் ஆகியோருக்கு பெரும் அதிர்ச்சியை அமைந்தது. ஏனென்றால், இந்த சீசனில் முதல் முறையாக மூன்று நடுவர்களிடம் இருந்தும் 10-10-10 என முழு மதிப்பெண்களை பெற்ற போட்டியாளர் இவர்தான். இவரே இந்த வாரம் குறைவான மதிப்பெண்கள் பெற்று எலிமினேட் ஆகிவிட்டாரா என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.