காந்தாரா சாப்டர் 1 விழாவில் கண்ணீர்விட்டு பேசிய நடிகை ருக்மிணி வசந்த்.. காரணம் என்ன?

காந்தாரா சாப்டர் 1 விழாவில் கண்ணீர்விட்டு பேசிய நடிகை ருக்மிணி வசந்த்.. காரணம் என்ன?

ருக்மிணி வசந்த்

கன்னடத்தில் வெளியான சப்த சாகரதாச்சே எலோ படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ருக்மிணி வசந்த். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் எண்ட்ரி கொடுத்த இவர், ஏஸ் மற்றும் மதராஸி என இரு திரைப்படங்களில் இரு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.

காந்தாரா சாப்டர் 1 விழாவில் கண்ணீர்விட்டு பேசிய நடிகை ருக்மிணி வசந்த்.. காரணம் என்ன? | Rukmini Vasanth Got Emotional In Kantara Pressmeet

அடுத்ததாக ருக்மிணி வசந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் காந்தாரா சாப்டர் 1. இப்படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த காந்தாரா படத்தின் Prequel-ஆக இப்படம் உருவாகியுள்ளது.

காந்தாரா சாப்டர் 1 விழாவில் கண்ணீர்விட்டு பேசிய நடிகை ருக்மிணி வசந்த்.. காரணம் என்ன? | Rukmini Vasanth Got Emotional In Kantara Pressmeet

கண்ணீர்விட்டு பேசிய நடிகை

இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ருக்மிணி வசந்த், நேற்று நடைபெற்று டிரைலர் லான்ச் விழாவில் மிகவும் எமோஷனலாக பேசினார்.

இதில், “ரிஷப் ஷெட்டி சார், இந்த வாய்ப்புக்கு மிகவும் நன்றி. ஒரு மனிதனாக காந்தாரா சாப்டர் 1 படம் என்னை செல்லுலார் அளவில் மாற்றியுள்ளது. சப்த சாகரதாச்சே எலோ சைட் ஏ படத்தின் பிரிமியர் போது, நீங்கள் என் நடிப்பை மிகவும் பாராட்டியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது மிகவும் எமோஷனலானது” என கண்ணீர்விட்டு பேசினார் ருக்மிணி வசந்த்.

காந்தாரா சாப்டர் 1 விழாவில் கண்ணீர்விட்டு பேசிய நடிகை ருக்மிணி வசந்த்.. காரணம் என்ன? | Rukmini Vasanth Got Emotional In Kantara Pressmeet

நேற்று காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், காந்தாரா படத்தில் இருந்த தாக்கம் இல்லை என சிலர் விமர்சனங்கள் வைத்தனர். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இப்படம் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *