காஞ்சனா 4 எடுக்கும் லாரன்ஸ்.. பேயாக வரும் டாப் ஹீரோயின்! எதிர்பார்க்காத ஒருவர்

ராகவா லாரன்ஸ் என்றாலே அவரது ஹாரர் படங்கள் தான் ரசிகர்கள் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்.
தற்போது காஞ்சனா 4ம் பாகத்தை லாரன்ஸ் எடுத்து வருகிறார். அதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் கவர்ச்சி நடிகை நோரா படேஹி ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.
பேயாக வரும் டாப் நடிகை
காஞ்சனா 4ன் அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் தற்போது படத்தை பற்றி ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் ராஷ்மிகா மந்தனா தான் நடிக்கிறாராம். அவர் தான் படத்தில் பேயாக வருகிறார் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இதுபற்றி படக்குழு இன்னும் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.