கரூர் சம்பவம்.. வீடியோக்களை பார்த்துவிட்டு இயக்குனர் ரத்ன குமார் எடுத்த முடிவு

கரூர் சம்பவம்.. வீடியோக்களை பார்த்துவிட்டு இயக்குனர் ரத்ன குமார் எடுத்த முடிவு


நடிகர் விஜய் கடந்த வாரம் கரூரில் அரசியல் பிரச்சாரம் செய்ய சென்று இருந்தார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். அந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் விரைவில் தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கைதாக இருக்கின்றனர்.

இந்நிலையில் கரூர் சம்பவத்தின்போது எடுத்த வீடியோக்கள் தற்போது ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.

கரூர் சம்பவம்.. வீடியோக்களை பார்த்துவிட்டு இயக்குனர் ரத்ன குமார் எடுத்த முடிவு | Karur Tragedy Director Rathna Kumar Goes Offline

ரத்ன குமார் எடுத்த முடிவு

இந்நிலையில் லியோ, மாஸ்டர் போன்ற படங்களில் விஜய் உடன் பணியாற்றி இருந்த இயக்குனர் ரத்னகுமார் தனது நெஞ்சம் உடைத்துவிட்டகக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

“கரூர் சம்பவத்தில் இருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை. ஒவ்வொரு நாளும் புதுபுது வீடியோ வந்துகொண்டிருக்கிறது, அதை பார்த்து என் இதயம் உடைந்துபோகிறது.”

“குறிப்பாக ஒரு வீடியோ பார்த்து நான் பலர் மீது இருக்கும் நம்பிக்கையை இழந்துவிட்டேன். அதனால் மன அமைதிக்காக நான் offline செல்ல போகிறேன். நன்றி” என கூறி இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *