கருப்பு முதலில் விஜய்க்கு சொன்ன கதை! உண்மையை போட்டுடைத்த RJ பாலாஜி

RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படம் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. சூர்யா கெரியரில் ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வரும் நிலையில் இந்த படம் கைகொடுக்கும் என அவரது ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் RJ பாலாஜி அளித்த பேட்டி ஒன்றில் இந்த கதை விஜய்க்கு தான் முதலில் சொன்னேன் என தெரிவித்து இருக்கிறார்.
விஜய்க்கு சொன்ன கதை
2023ல் இந்த கதையை எழுத தொடங்கினேன். ஐடியா பெரிது என்பதால் ஒரு பெரிய ஸ்டார் இந்த கதைக்கு தேவை. விஜய் சாருக்கு இந்த கதையை நான் சொன்னபோது உடனே ஷூட்டிங் தொடங்க முடியுமா என கேட்டார். என் ஸ்டைலில் ஒரு படம் வேண்டும் எனவும் கேட்டார்.
எனக்கு இன்னும் நேரம் வேண்டும் என கேட்டேன். அதன் பின் அவர் அரசியலுக்கு சென்றுவிட்டார். அவருடன் கதை பற்றி பேசும்போது தான் ஸ்கிரிப்ட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அதற்கு பிறகு தான் சூர்யாவுக்கு அந்த கதையை சொன்னேன் என RJ பாலாஜி கூறி இருக்கிறார்.






