கத்தி பட வில்லன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது.. அதிர்ச்சி காரணம்

கத்தி பட வில்லன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது.. அதிர்ச்சி காரணம்


விஜய்யின் கத்தி படத்தில் கார்ப்பரேட் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தவர் நீல் நிதின் முகேஷ். அவர் அந்த படம் மூலமாக தமிழில் பெரிய அளவில் பிரபலம் ஆனாலும் அதற்கு பிறகு வேறு எந்த படமும் நடிக்கவில்லை.

நீல் நிதின் முகேஷ் தற்போது தனது அடுத்த பட ஷூட்டிங்கிற்காக அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். அவர் நியூ யார்க் விமான நிலையத்தில் சென்று இறங்கிய போது அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை பார்த்துவிட்டு உடனே கைது செய்துவிட்டார்களாம்.

நீங்கள் பார்க்க இந்தியர் போல இல்லை என அவர்கள் காரணம் சொல்லி இருக்கின்றனர்.

கத்தி பட வில்லன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது.. அதிர்ச்சி காரணம் | Neil Nitin Mukesh Detained In New York Airport

4 மணி நேரத்திற்கு மேல் விசாரணை

தான் யார் என்கிற விஷயத்தை விளக்கி சொல்ல கூட அவர்கள் எனக்கு வாய்ப்பு தரவில்லை. நான் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறேன் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் என்னை கைது செய்துவிட்டார்கள்.

பல மணி நேரத்திற்கு பிறகு வந்து ‘நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என கேட்டார்கள். என்னை பற்றி googleல் தேடி பாருங்க என கூறினேன். அதற்கு பிறகு அவர்கள் என் அப்பா, தாத்தா ஆகியோர் பற்றி எல்லாம் கேட்டார்கள். அதற்கு பிறகு தான் என்னை வெளியில் அனுப்பினார்கள் என நீல் நிதின் முகேஷ் கூறி இருக்கிறார்.

அவரது தாத்தா முகேஷ் ஒரு பிரபல பின்னணி பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல அப்பா நிதின் முகேஷும் பாடகர் தான்.

சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் அவர் தோற்றத்தில் இந்தியர் போல இல்லை என்கிற காரணத்திற்காக விமான நிலையத்தில் இப்படி சிக்கலை சந்தித்து இருக்கிறார் நீல் நிதின் முகேஷ். 

கத்தி பட வில்லன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது.. அதிர்ச்சி காரணம் | Neil Nitin Mukesh Detained In New York Airport


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *