கட்டுக்கட்டாக பணம்.. வில்லன்களுக்கு ஷாக் கொடுத்த மீனா! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் அரசி திருமணம் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் முடிந்து இருக்கிறது. தானே தாலி கட்டிக்கொண்டு அதை குமரவேல் தான் கட்டியதாக அரசி போய் சொல்கிறார்.
அதன் பின் அவன் வீட்டுக்கே செல்லும் அரசி அவனை தொடர்ந்து மிரட்டிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அடுத்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
மீனா வைத்த ஆப்பு
வில்லன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக பழனியின் மனைவி வந்து கூறுகிறார். அதை கேட்டுவிடும் மீனா நேராக வருமான வரித்துறைக்கு போன் செய்து கூறிவிடுகிறார்.
அதன் பின் ஐடி ரெய்டு நடத்தி வில்லன் வீட்டில் இருந்த கட்டுக்கட்டாக பணத்தை தூக்கிச்சென்று விடுகின்றனர்.
வீட்டுக்கு புதிதாக வந்திருக்கும் அரசி தான் காரணம் என அவர்கள் கோபமாக பேசுகின்றனர். இதோ ப்ரோமோ.