ஒரே ஒரு படம் தான் நடிச்சேன், அதுக்கேவா.. சர்ச்சைக்கு ஆதாரத்துடன் KPY பாலா கொடுத்த பதிலடி

ஒரே ஒரு படம் தான் நடிச்சேன், அதுக்கேவா.. சர்ச்சைக்கு ஆதாரத்துடன் KPY பாலா கொடுத்த பதிலடி


நடிகர் KPY பாலா சமீபகலமாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மலைகிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மாற்று திறனாளிகளுக்கு வீல்சேர், வறுமையில் இருந்தவருக்கு பைக், விவசாய குடும்பத்திற்கு மாடுகள், கஷ்டத்தில் இருப்பவருக்கு குட்டி டிராக்டர், அயன் கடைக்கு வாஷிங் மெஷின் என பல உதவிகள் செய்து இருக்கிறார்.

சமீபத்தில் அவர் காந்தி கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார். அந்த படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி இருந்தது.

இந்நிலையில் KPY பாலா பல பேருக்கு எப்படி உதவுகிறார், அவருக்கு எப்படி பணம் வருகிறது என ஒரு சர்ச்சை சில தினங்களாக வெடித்திருக்கிறது. அவர் ஒரு சர்வதேச கைக்கூலி, போலியான ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கி கொடுத்ததாக காட்டுகிறார் என ஒரு சர்ச்சை கிளம்பியது.

ஒரே ஒரு படம் தான் நடிச்சேன், அதுக்கேவா.. சர்ச்சைக்கு ஆதாரத்துடன் KPY பாலா கொடுத்த பதிலடி | Kpy Bala Reply To Controversy On Funds

KPY பாலா காட்டமான விளக்கம்

இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி KPY பாலா காட்டமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். “ஒரே ஒரு படம் தான் நடித்தேன், அதற்கே இப்படி பண்ணுவாங்க என எனக்கு சத்தியமாக தெரியாது” என அவர் வருத்தப்பட்டு இருக்கிறார்.

“நான் செய்த உதவியால் எத்தனை பேர் வாழ்கிறார்கள் ஏன பாசிட்டிவ் விஷயங்கள் பற்றி யாருமே பேசுவது இல்லை. அந்த ஆம்புலன்சில் இருக்கும் நம்பர் பிளேட்டில் ஒரு D எக்ஸ்ட்ராவாக ஒட்டிவிட்டார்கள், அதை வைத்து கொண்டு எவ்ளோ பன்றாங்க.”

“அதை வைத்துக்கொண்டு ‘Exposed, முகத்திரை கிழிந்தது’ என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் சர்வதேச கைக்கூலி என ஒருவர் கூறி இருக்கிறார். அய்யா நான் தினக்கூலி.”

“நான் சொந்தமாக சம்பாதிப்பதை மட்டும் தான் உதவியாக செய்கிறேன். எனக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வரவில்லை. எனக்கு Trust எதுவும் இல்லை.”

“நான் அடுக்குமாடி வீடு, சொகுசு கார் என வாங்கி இருந்தால் இப்படி பிரச்சனை வந்து இருக்காது. இந்த பிரச்சனை முடிவது போல தெரியவில்லை. அதனால் தான் வீடியோ வெளியிடுகிறேன்” என KPY பாலா பேசி இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *