ஒரு படத்திற்காக நடிகை கயாடு லோஹர் செய்த விஷயம்.. வைரலாகும் வீடியோ

கயாடு லோஹர்
இன்றைய சென்சேஷனல் நாயகிகளில் ஒருவர் கயாடு லோஹர். டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். அடுத்ததாக அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சிம்புவின் 49வது திரைப்படத்தின் கதாநாயகியும் இவர் தான். சமீபத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளிவந்தது. கோலிவுட் திரையுலகின் பிஸியான கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார்.
செய்த விஷயம்
இந்நிலையில், பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்திற்காக அவர் பட்ட கஷ்டங்கள் மற்றும் அவரது கைகளை தூக்கி ஒட்டுமொத்தமாக மண்ணும், ரத்தமும் கலந்த மேக்கப் எல்லாம் போட்டு அவர் ரெடி ஆகும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தற்போது, இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.