எம்.பி பதவி வேண்டாம், அது மட்டும் போதும்.. விஜயகாந்த் மகன் கண்ணீர் பேச்சு

விஜயகாந்த்
ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இது விஜயகாந்தின் 100-வது படமாகும். இப்படத்தின் மூலம் தான் விஜய்காந்திற்கு ‘கேப்டன்’ என்ற அடைமொழி கிடைத்தது.
கேப்டன் விஜயகாந்திற்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் அரசியலிலும், இளைய மகன் சினிமாவிலும் களமிறங்கியுள்ளனர்.
கண்ணீர் பேச்சு
தற்போது, ‘கேப்டன் பிரபாகரன்’ படம் வரும் 22-ல் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் விழாவில் விஜய பிரபாகரன் கண்ணீர் மல்க பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” எம்.பி பதவி எல்லாம் எனக்கு முக்கியம் இல்லை. கேப்டன் மகன் விஜய பிரபாகரன் என்ற பெயர் தான் எனக்கு முக்கியம். எனக்கு வேற பெருமை எதுவும் வேண்டாம், கடைசி வரை விஜயகாந்த் மகன் என்ற பெருமை மட்டும் போதும்” என்று தெரிவித்துள்ளார்.