என்னை அழிக்க பார்த்தாங்க.. பிக் பாஸ் 9ல் நுழைத்த கெமி மேடையில் உருக்கம்

குக் வித் கோமாளி புகழ் கெமி தற்போது பிக் பாஸ் 9ம் சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார். மேடையில் விஜய் சேதுபதியிடம் பேசிய அவர் தான் இளம் வயதில் கூடைப்பந்து வீராங்கனை என கூறினார்.
தேசிய அளவிலான அணியில் தான் பங்கேற்று பதக்கம் ஜெயித்ததாகவும், அது எளிதில் நடக்கவில்லை, அதிகம் பாலிடிக்ஸ் இருந்தது. அதுவே ஒரு கட்டத்தில் தான் கூடைப்பந்து அணியில் இருந்து வெளியேற காரணமாகிவிட்டது என கூறி இருக்கிறார்.
அழிக்க பாத்தாங்க..
“என்னை அழிக்கனும்னு பாத்தாங்க. கடுமையான உழைப்பு இருந்தால் எந்த பாலிடிக்ஸ் இருந்தாலும் ஜெயிக்கலாம்.”
“தமிழ்நாட்டில் எதிர்த்தாங்க. என்னை அழிக்க வேண்டும் என பார்த்தாங்க. ஆனால் கடும் உழைப்பால் தான் நான் தேசிய அளவில் ஜெயித்தேன்.”
இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.