எதை இழக்கிறோம்?.. பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி

எதை இழக்கிறோம்?.. பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி


பறந்து போ

ராம் இயக்கத்தில் இதுவரை நான்கு திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய படைப்புகளை தொடர்ந்து ஐந்தாவதாக வெளிவந்துள்ள படம்தான் பறந்து போ.

இப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜூ வர்கீஸ், விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

எதை இழக்கிறோம்?.. பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி | Nayanthara Open Talk About Movie

நயன்தாரா 

இந்நிலையில், இப்படம் குறித்து நடிகை நயன்தாரா அவரது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்.

அதில், ” இந்த பரபரப்பான உலகத்தை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்னவென்று உணர விரும்பினால், குழந்தைகளை கூட்டிக்கொண்டு மலை ஏறுங்கள்,  அல்லது அவர்களை ராம் சாரின் ”பறந்து போ” படத்திற்கு அழைத்துச் சென்று காணுங்கள்.

வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை , எதை இழக்கிறோம் என்பதை இந்த படம் அழகாக எடுத்துரைக்கிறது. நான் பார்த்த மிக இனிமையான படங்களில் இந்த படமும் ஒன்று. ராம் ஒரு சிறந்த இயக்குநர், அவருக்கும் படக்குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.     

எதை இழக்கிறோம்?.. பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி | Nayanthara Open Talk About Movie  


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *