உலகளவில் துரந்தர் 2 இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

துரந்தர் 2
Gully Boy, பத்மாவத், ராம் – லீலா, பைஜ்ரவ் மஸ்தானி என பல சூப்பர்ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தவர் நடிகர் ரன்வீர் சிங். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள திரைப்படம்தான் துரந்தர் 2.
இப்படத்தை இயக்குநர் ஆதித்யா தார் இயக்கியிருந்தார். சாரா அர்ஜுன், மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
கடந்த ஆண்டு வெளிவந்த இப்படத்தின் முதல் பாகம், 2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய படம் என்கிற சாதனையை படைத்தது.
வசூல்
இதனை தொடர்ந்து துரந்தர் 2 வெளியாகி, வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், 15 நாட்களை கடந்துள்ள துரந்தர் 2 திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 1500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதன்மூலம், இதுவரை 2026ஆம் ஆண்டு வெளிவந்துள்ள இந்திய திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனையை இந்த ஆண்டில் வெளிவரும் மற்ற திரைப்படங்கள் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






