உலகளவில் காந்தாரா சாப்டர் 1 இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

காந்தாரா
காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த இப்படத்தில் அவருடன் இணைந்து ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் என்பவர் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம்.
வசூல்
இந்த நிலையில், இதுவரை உலகளவில் காந்தாரா சாப்டர் 1 படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 670 கோடி வசூல் செய்துள்ளது.
ரூ. 1000 கோடி என்கிற வசூல் சாதனையை காந்தாரா சாப்டர் 1 படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்பதை.