உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை.. நடிகை மஞ்சிமா மோகன் ஓபன் டாக்

மஞ்சிமா மோகன்
மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கி தமிழ் பக்கம் வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மஞ்சிமா மோகன்.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
பின் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், எஃப்ஐஆர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் சுழல் 2 என்ற ஹாட்ஸ்டார் வெப் தொடரில் நடித்தார், அதில் அவரது நடிப்பிற்கு பாராட்டு குவிந்தது.
ஓபன் டாக்
இந்நிலையில், “எனக்கு பிசிஓடி இருந்தது. கொஞ்சம் எடை கூடியபோது, நான் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்தேன், பிசிஓடியைக் குறைக்க வேண்டியிருந்தது.
எப்படியாவது எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தேன், அறுவை சிகிச்சை மூலம் எடையைக் குறைக்க மருத்துவர்களைச் சந்தித்திருக்கிறேன்.
உடல் எடை தான் மிகப்பெரிய பிரச்சனை என்பது போல எல்லோரும் பேசுகிறார்கள். நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும், ஒரு கட்டத்திற்கு பின் யாரும் நாம் எப்படி இருக்கிறோம் என்று விசாரிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.