உங்களை என்றென்றும் நேசிக்கிறேன்.. இயக்குநர் லோகேஷ் உருக்கம்

லோகேஷ் கனகராஜ்
இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் ரஜினிகாந்துடன் முதல் முறையாக கைகோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் இப்படம் வெளியாக உள்ள நிலையில், லோகேஷ் அவரது ட்விட்டர் தளத்தில் போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் உருக்கம்
அதில், ” எனது இயக்குநர் வாழ்க்கையின் முதல் நாளில் இருந்து இன்று வரை எனக்கு தூண்களாக இருப்பவர்கள் அன்பறிவ். அவர்களை பற்றி சில விஷயங்கள் கூறுவதற்கு இதுவே சரியான தருணம்.
நான் இப்போது இருக்கும் இடத்தில் என்னை பார்க்க அவர்கள் முதலில் இருந்தே விரும்பினார்கள்.
என் வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்து வெற்றிகளிலும் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. உங்களை இன்னும் பெரிய இடத்தில் பார்க்க வேண்டும். உங்களை என்றென்றும் நேசிக்கிறேன் மாஸ்டர்ஸ்” என்று பதிவிட்டுள்ளார்.