ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவி என்றாலே சீரியல்களின் ராஜா தான், தொலைக்காட்சி ஆரம்பித்த நாள் முதல் இப்போது வரை அதில் கெத்தாக உள்ளார்கள்.
சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல், எதிர்நீச்சல் தொடர்கிறது என நிறைய சீரியல்களின் கதை பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
2வது சீசன் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் டிஆர்பியில் டாப் 6 அல்லது 7வது இடத்தில் இருந்து வந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இப்போது பரபரப்பான கதைக்களம் காரணமாக டாப் 5ல் இடம்பெறுகிறது.
புரொமோ
தர்ஷன் திருமணம் பற்றி பேச வந்த ஈஸ்வரி தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்க வைத்துவிட்டார் குணசேகரன்.
அவர் தாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை அறிவுக்கரசி கைப்பற்றிவிட்டு குணசேகரனுக்கு ஆட்டம் காட்ட முடிவு செய்துள்ளார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி மருத்துவமனையில் இன்னும் சீரியஸான நிலையில் இருக்க அவரது வழக்கில் புதிய அதிகாரி வந்துள்ளார்.
இன்றைய எபிசோட் புரொமோவில், ஈஸ்வரி தாக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் இருக்க விசாரிக்க போலீஸ் அதிகாரி குணசேகரன் வீட்டிற்கு வருகிறார்.
அதைப் பார்த்து குணசேகரன் கொஞ்சம் ஷாக் ஆகிறார், இன்னொரு பக்கம் டாக்டர் யாரோ ஒருவர் ஈஸ்வரியை சந்தித்துள்ளார், அவரால் ஈஸ்வரி மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என கூறுகிறார்.
இல்லை யாரும் அவரை வந்து பார்க்கவில்லை என ஜனனி கூறுகிறார், என்ன நடந்திருக்கும் என யோசிக்கிறார்.
ஈஸ்வரியை யாருக்கும் தெரியாமல் வந்தது பார்கவி தான், அவரால் ஈஸ்வரி கை எல்லாம் அசைந்தது, அழவும் செய்தார்.
இதோ இன்றைய எபிசோட் புரொமோ,