இயக்குநருடன் இரவு டின்னர் டேட்டிங்.. இரண்டாம் திருமணம் செய்யபோகிறாரா சமந்தா

சமந்தா – ராஜ் நிடிமோரு
நடிகை சமந்தா பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோரு என்பவரை காதலித்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
ஆனால், சமந்தா தரப்பில் இருந்தோ அல்லது ராஜ் நிடிமோரு தரப்பில் இருந்தோ எந்த ஒரு மறுப்பும் இதுவரை வெளிவரவில்லை.
இருவருக்கும் நெருக்கமாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சமந்தா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
டின்னர் டேட்டிங் – இரண்டாம் திருமணமா
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு மும்மையில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இருவரும் டின்னர் டேட்டிங் சென்றுள்ளனர். டின்னர் முடித்த பின் இருவரும் ஒன்றாக ஒரே காரில் சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமந்தா – நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தபின் நடிகை சோபிதாவை காதலித்து மறுமணம் செய்துகொண்டார் நாக சைதன்யா. இதற்காக கடும் விமர்சனங்களுக்கு ஆளானார்.
இதை தொடர்ந்து தற்போது சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிடிமோரு காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் இரண்டாம் திருமணம் செய்யபோகிறாரா சமந்தா என்கிற பேச்சு பாலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.