இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் தமிழ் சினிமா முன்னணி ஹீரோவின் திரைப்படம்.. காத்திருக்கும் ரசிகர்கள்

ஓடிடி
திரையரங்குகளில் வெளிவரும் திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதே அளவு எதிர்பார்ப்பை ஓடிடியிலும் ரசிகர்கள் வைத்துள்ளனர்.
அதுவும் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. அப்படி சமீபத்தில் திரையரங்கில் வெளிவந்த முன்னணி ஹீரோவின் திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளிவரவுள்ளது.
கர
அது வேறு யாருடைய படமும் இல்லை, நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான கர திரைப்படம்தான். கடந்த மாதம் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதனால் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில், வருகிற மே 28ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கர திரைப்படம் வெளியாகிறது என வேல்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை ஓடிடியில் காண ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






