இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா? டாப் நடிகர் தான்!

யார் தெரிகிறதா?
தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் மற்றும் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில டிரெண்ட் ஆகி வருகிறது. ஒரு சில பிரபலம் யார் என தெரியும், சிலரது புகைப்படங்களை கண்டுபிடிக்கவே முடியாது.
அந்த வகையில், தற்போது, ஒரு டாப் நடிகரின் சிறு வயது ஸ்டில் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அட இவரா?
அது வேறுயாருமில்லை, தமிழ் சினிமாவில் ரசிகர்களால் சியான் என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விக்ரம் தான்.
ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனது உடலை வருத்திக்கொண்டு கதைக்கு என்ன தேவையோ, அதை செய்வார். அந்நியன், ஐ, தங்கலான் போன்ற படங்கள் மூலம் மக்கள் மனதை வென்றார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து இப்போது இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது, இவரின் சிறு வயது போட்டோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.