இதுவரை இல்லாத அளவுக்கு பல நாடுகளில் வெளியாக உள்ள ரஜினியின் கூலி திரைப்படம்.. மாஸ் அப்டேட்

கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சோபின் ஷபீர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14- ம் தேதி திரைக்கு வர உள்ளது.
மாஸ் அப்டேட்
இந்நிலையில், கூலி படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது, கூலி திரைப்படம் உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பார்வையாளர்களை சென்றடையக்கூடும் என்று கூறப்படுகிறது.
சர்வதேச திரைப்பட விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹம்சினி என்டர்டெயின்மென்ட், கூலி படத்தை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெளியீட்டிற்கு தயாராகி வருவதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.