இதயம் சீரியலில் இருந்து விலகிய ஜனனி அசோக், இனி பாரதியாக நடிக்கப்போவது இவர்தான்… போட்டோவுடன் இதோ

இதயம் சீரியல்
ஜனனி அசோக், ரிச்சர்ட் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த தொடர் இதயம்.
கடந்த ஆகஸ்ட் 2023ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் 650 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் தொடர் முடிவை எட்டவுள்ள நிலையில் தொடரில் இருந்து நடிகை ஜனனி அசோக்குமார் விலகுவதாக கூறியிருந்தார்.
2ம் பாகம்
இந்த நிலையில் இதயம் 2ம் பாகத்தில் நடிக்க இருப்பவர்கள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
ஜனனி அசோக் சீரியலில் இருந்து வெளியேற அவருக்கு பதில் 2ம் பாகத்தில் Nindu Noorella Savaasam சீரியல் புகழ் பல்லவி கௌடா புதிய நாயகியாக 2ம் பாகத்தில் நடிக்கிறார்.
இவரை தாண்டி பரீனா, ஸ்ரீபிரியா, விட்டல், மனுஷ் என பலர் நடிக்க கமிட்டாகியுள்ளனர்.