ஆல்யா மானசாவின் பாரிஜாதம் சீரியலில் இருந்து வெளியேறிய மெயின் ஹீரோ… ஏன், அவரே வெளியிட்ட பதிவு

ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையில் வலம்வரும் டாப் சின்னத்திரை நாயகிகளில் ஒருவர் தான் ஆல்யா மானசா.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் நடிகைக துவங்கியவர் அடுத்து ராஜா ராணி 2ம் பாகத்தில் நடித்து வந்தார். அந்த நேரத்தில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து வெளியேறினார்.
அடுத்து சன் டிவி பக்கம் சென்றவர் இனியா என்ற சீரியலில் நடித்து வந்தார், அந்த தொடரில் சில வருடம் முன் முடிவுக்கு வந்தது.
பாரிஜாதம்
இனியா தொடருக்கு பிறகு நடிக்க கொஞ்சம் இடைவேளை எடுத்தவர் பின் ஜீ தமிழ் பக்கம் வந்தார். இந்த தொலைக்காட்சியில் பாரிஜாதம் என்ற சீரியலில் நடித்து வருகிறார், தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது என்ன தகவல் என்றால் பாரிஜாதம் சீரியலில் இருந்து மெயின் ஹீரோவாக நடிக்கும் ரக்ஷித் வெளியேறியுள்ளாராம்.
அதற்கான காரணத்தை கூறவில்லை ஆனால் சீரியல் குழுவிற்கு நன்றி என பதிவு செய்துள்ளார்.






