ஆனந்திக்கு ஆதரவாக வந்த மித்ரா.. நம்பவே முடியலையே! சிங்கப்பெண்ணே லேட்டஸ்ட் ப்ரோமோ

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தான் எந்த தவறும் செய்யவில்லை, எவனோ ஒருவன் செய்த செயலால் தான் கர்ப்பம் ஆனேன் என மொத்த ஊருக்கும் நிரூபிப்பேன் என சொல்லி சவால் விட்டுவிட்டு மீண்டும் சென்னைக்கு கிளம்பி வந்திருக்கிறார்.
மகேஷ் தான் அவரது கர்ப்பத்திற்கு காரணம் என அவர் எப்படி கண்டுபிடிக்க போகிறார் என்பது தான் கதையில் அடுத்தகட்ட நகர்வாக இருக்கும் என தெரிகிறது.
இன்றைய எபிசோடு ப்ரோமோ
இந்நிலையில் சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோடு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆனந்தி மீண்டும் ஹாஸ்டலுக்கு வரும்போது அவளை உள்ளே விடாமல் சில பெண்கள் மோசமாக பேசுகிறார்கள்.
அப்போது வில்லி மித்ரா வந்து அவர்களை திட்டி ஆனந்திக்கு ஆதரவாக பேசுகிறார். அவர் திருந்திவிட்டாரா? இருக்காது.. ஆனந்தி வேறு எங்கும் சென்றுவிடக்கூடாது என்பதால் தான் இப்படி ஆனந்திக்கு ஆதரவாக பேசி இருப்பார்.
ப்ரோமோ இதோ பாருங்க.