அஸ்திரம் பட திரை விமர்சனம்

அஸ்திரம் பட திரை விமர்சனம்


அஸ்திரம்

ஷாம் பல வருடமாக ஒரு சோலோ ஹிட் படத்திற்காக போராடி வருகிறார்.

அப்படி ஒரு ஹிட் படமாக அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள அஸ்திரம் அமைந்ததா? பார்ப்போம்.

அஸ்திரம் பட திரை விமர்சனம் | Asthram Movie Review



கதைக்களம்


ஷாம் கொடைக்கானல் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஆக இருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்திலேயே ஒருவர் மக்கள் கூடும் பார்க்-ல் கத்தியை தன் வயிற்றில் தானே குத்திக்கொண்டு இறக்கிறார்.

இந்த கேஸை ஷாம் கையில் எடுக்கிறார், ஏனெனில் இதே போல் ஏற்கனவே மதுரை மற்றும் சென்னை பகுதியில் இருவர் கையில் கத்தியுடன் வயிற்றை கிழித்து இறந்துள்ளார்கள்.


இந்த லீட்-யை கையில் எடுத்துக்கொண்டு எதற்காக யார் இப்படி செய்ய தூண்டுவது என்ற மர்மத்தை ஷாம் கண்டிப்பிடிக்க முயற்சிக்க, அவரின் முயற்சி வெற்றி கிடைத்ததா என்பதே மீதிக்கதை.  

படத்தை பற்றிய அலசல்


ஷாம் நீண்ட வருடங்கள் கழித்து தனக்கு ஏற்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், படம் முழுவதுமே நம்மை போலவே யார் தான் அந்த தற்கொலயை செய்ய தூண்டுவது என்ற பதட்டம் மற்றும் வெறுப்பை அவர் படம் முழுவதும் காட்டுவது நடிகனாக தான் இன்னும் சோடை போகவில்லை என காட்டியுள்ளார்.


படத்தின் முதல் பாதி விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை, யார் அந்த மார்டின், செஸ் போர்ட்-க்கும் கல்லார்க்கு ம் என்ன சம்மந்தம் என்ற தேடுதல் மற்றும் சுவாரஸ்யம் குறையவே இல்லை.


இரண்டாம் பாதியும் அப்படியே ஆரம்பித்து, ஷாம்-யை வேண்டுமென்றே இந்த கேஸில் கொண்டு வந்து அவரை அலைய விட்டதற்கான காரணத்தை ப்ளேஷ் பேக்கில் சொன்ன விதம் சூப்பர்.


அதே நேரத்தில் அந்த ப்ளேஷ்பேக் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்று இருக்கலாம். இது தான் விஷயம் என்று படத்தில் ஆங்கங்கே சொல்ல் விட்டார்கள், அப்படிதிருந்தும் அத்தனை நீள ப்ளாஷ்பேக் தேவையா என்று கேட்க தோன்றுகிறது.


படத்தில் ஷாம் தவிற அவருக்கு உதவியாளராக வரும் சுமன் என்பவருக்கு மட்டும் தான் கொஞ்சம் நடிக்கும் கதாபாத்திரம், மற்றப்படி படம் முழுவதுமே ஷாம்-ன் இன்வெஸ்டிகேஷன் ஆகவே படம் செல்கிறது.

அந்த ப்ளாஷ்பேக்கில் வந்த சிறுவன் நடிப்பு நன்று.

டெக்னிக்கலாக படம் இசை திரில்லர் படத்திற்கான அனுபவத்தை கொடுத்தாலும், படம் கம்மி பட்ஜெட் என்பது பல இடங்களில் தெரிகிறது.


க்ளாப்ஸ்



படத்தின் முதல் பாதி

ஷாம் நடிப்பு.

கதைக்களம்



பல்ப்ஸ்



ப்ளாஷ்பேக் கொஞ்சம் இழுவையாக இரண்டாம் பாதியில் அமைந்தது.

அத்தனை போராட்டத்துக்கும் கிளைமேக்ஸ் இன்னும் எட்ஜ் ஆப் தி சீட் இருந்திருக்கலாம்.


மொத்தத்தில் சிறு பட்ஜெட்டில் ஒரு டீசண்ட் திரில்லர் பார்த்த அனுபவத்தை தரும் இந்த அஸ்திரம்.


2.75/5


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *