அவுத்து போட்டா பட வாய்ப்பு கிடைக்குமா.. ஆத்திரம் வருது: விஜய் டிவி சிவாங்கி ட்ரோல்களுக்கு பதிலடி

அவுத்து போட்டா பட வாய்ப்பு கிடைக்குமா.. ஆத்திரம் வருது: விஜய் டிவி சிவாங்கி ட்ரோல்களுக்கு பதிலடி


விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோவில் பாடகியாக இருந்து அதன் பின் குக் வித் கோமாளி ஷோவில் காமெடியனாக பாப்புலர் ஆனவர் சிவாங்கி.

அவர் ஆரம்பகட்டத்தில் ஹோம்லியான உடைகளில் தான் ஷோக்களில் கலந்துகொள்வார். இன்ஸ்டாவிலும் அதே விதமான புகைப்படங்கள் தான் வெளியிட்டு வந்தார்.

ஆனால் சமீபத்தில் அவர் வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்றபோது அங்கு ஷார்ட் உடையில் அவர் வலம் வந்தார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட அதற்கு பல விதமான கமெண்டுகள் வந்தது.

அவுத்து போட்டா பட வாய்ப்பு கிடைக்குமா.. ஆத்திரம் வருது: விஜய் டிவி சிவாங்கி ட்ரோல்களுக்கு பதிலடி | Vijay Tv Sivaangi Reply To Trolls On Short Dress

ட்ரோல்களுக்கு பதிலடி

இந்நிலையில் தான் ஷார்ட் உடையில் போட்டோ வெளியிடுவது பட வாய்ப்புக்காக தான் என பலரும் விமர்சிப்பது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவாங்கி பேசி இருக்கிறார்.

“அவுத்து போட்டு காட்டுனா மட்டும் பட வாய்ப்பு கிடைத்துவிடுமா. எனக்கு புரியவில்லை. என்ன லாஜிக் இது. அவுத்து போடும் எல்லாருக்குமே வாய்ப்பு கிடைக்கிறதா. எனக்கு ஆத்திரம் வருகிறது”.


“நான் எப்போதும் டைட் ஆன உடைகளை போடா மாட்டேன். நான் குண்டாக தெரிவதால் அப்படி இருந்தேன்.”

“ஆனால் ஷார்ட்ஸ் அணிந்து பார்த்தபோது அது எனக்கு சரியாக இருந்தது. நான் என் மகிழ்ச்சிக்காக தான் அப்படி செய்தேன். பட வாய்ப்புக்காக அப்படி செய்யவில்லை. “

“உடை மாறிவிட்டால் character மாறிவிட்டது என்று கூட சொல்கிறார்கள். அப்படி இல்லை. காலம் முழுக்க சுடிதார் மட்டுமே போட்டுக்கொண்டிருக்க முடியுமா” என சிவாங்கி பேசி இருக்கிறார். 

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *