அவர் செம டேஞ்சர்.. சிவகார்த்திகேயன் குறித்து தக் லைஃப் பாடகி உடைத்த காமெடி விஷயம்

அவர் செம டேஞ்சர்.. சிவகார்த்திகேயன் குறித்து தக் லைஃப் பாடகி உடைத்த காமெடி விஷயம்


சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

தற்போது, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அவர் செம டேஞ்சர்.. சிவகார்த்திகேயன் குறித்து தக் லைஃப் பாடகி உடைத்த காமெடி விஷயம் | Thug Life Singer About Sivakarthikeyan

காமெடி விஷயம்

இந்நிலையில், சிவகார்த்திகேயன் குறித்து பின்னணி பாடகி சௌந்தர்யா பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” சூப்பர் சிங்கரில் நான் கலந்துகொண்டபோது சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்தார். அந்த சமயத்தில் நான் காதலித்துக்கொண்டிருந்தேன். எனவே என்னுடைய காதலரிடம் ஃபோனில் அடிக்கடி பேசி கொண்டிருந்தேன்.

அவர் செம டேஞ்சர்.. சிவகார்த்திகேயன் குறித்து தக் லைஃப் பாடகி உடைத்த காமெடி விஷயம் | Thug Life Singer About Sivakarthikeyan

என் காதல் குறித்து சிவகார்த்திகேயனுக்கு நன்றாக தெரியும். அங்கு அனைவர் முன்பும் ‘அப்படி நீங்கள் யாரிடம் தான் பேசுவீர்கள்’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.

அப்போது தான் நான் உணர்ந்துகொண்டேன் அய்யோ சிவாவிடம் ரகசியத்தை சொல்வதெல்லாம் செம டேஞ்சர்” என தெரிவித்துள்ளார்.       


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *