அருண்-முத்துவிற்கு ஏற்பட்ட சண்டை, செல்வம் பிரச்சனையில் வந்த முடிவு… சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

அருண்-முத்துவிற்கு ஏற்பட்ட சண்டை, செல்வம் பிரச்சனையில் வந்த முடிவு… சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சிறகடிக்க ஆசை

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு தொடராக உள்ளது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியலில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ஒரு விஷயம் ரோஹினி பற்றிய உண்மை எப்போது வெளியாகும் என்பது தான், அதுவும் சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது.

இப்போது விஜயா, மனோஜ்-ரோஹினிக்கு விவாகரத்து வாங்க முயற்சிக்க ரோஹினி சிந்தாமணி உதவியுடன் விவாகரத்து கேன்சல் செய்ய என்னென்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறார். 

அருண்-முத்துவிற்கு ஏற்பட்ட சண்டை, செல்வம் பிரச்சனையில் வந்த முடிவு... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial Feb 16 Episode Storyline

இதற்கு இடையில் விஜயா, மனோஜிற்காக தனது வீட்டை யாருக்கும் தெரியாமல் அடமானம் வைக்கிறார், மனோஜ் அண்ணாமலை கையெழுத்தை போடுகிறார். இப்படி பிரச்சனை செல்ல அடுத்து நீது, ரவிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கிறார். இதனால் அவர்களது வாழ்க்கையில் ஒரே பிரச்சனையாக செல்கிறது.

அருண்-முத்துவிற்கு ஏற்பட்ட சண்டை, செல்வம் பிரச்சனையில் வந்த முடிவு... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial Feb 16 Episode Storyline

இந்த இரு ஜோடியின் பிரச்சனைகளுக்கு இடையில்  செல்வம் அருண் அம்மா மீது கார் ஏற்றிய விவகாரம் செல்கிறது.

எபிசோட்

இன்றைய எபிசோடில், அருண் அண்ணாமலை மீது கார் ஏற்றி கொன்றால் ஏற்றுக்கொள்வாயா என கேட்க முத்து கோபத்தில் அவர் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார். அருண் 25 லட்சம் கொடுங்கள் என கூற அதற்கும் முத்து பக்கத்தில் கஷ்டம் என்கிறார்கள்.

கடைசியாக அருண் 5 லட்சம் இல்லையெனில் நான் நீதிமன்றம் செல்கிறேன் என கூற கடைசியில் ஒருவழியாக செல்வம் ஒப்புக்கொள்கிறார்.

அருண்-முத்துவிற்கு ஏற்பட்ட சண்டை, செல்வம் பிரச்சனையில் வந்த முடிவு... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial Feb 16 Episode Storyline

அடுத்து நீது, ரவியை பார்க்க வேண்டும் என டார்ச்சர் செய்ய அவரும் பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார். ரவி நல்ல பெண்ணாக தானே இருந்தீர்கள், என்ன ஆனது என கேட்க அவரோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரவியை லவ் டார்ச்சர் செய்கிறார்.

அடுத்து விஜயா, அருண் பணம் கேட்க விவகாரம் குறித்து முத்து-மீனாவை வழக்கம் போல் விமர்சனம் செய்கிறார். எபிசோட் கடைசியில், க்ரிஷ் ஜுரம் வந்ததால் மீனா-முத்து என புலம்புகிறார், ரோஹினியும் தவிக்கிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *