அம்மா இருக்கும்போது வைரமுத்து என்னை கட்டிப்பிடித்தார்.. தப்பான எண்ணம்! சின்மயி வெளிப்படை பேச்சு

அம்மா இருக்கும்போது வைரமுத்து என்னை கட்டிப்பிடித்தார்.. தப்பான எண்ணம்! சின்மயி வெளிப்படை பேச்சு


சின்மயி – வைரமுத்து

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகிகளில் ஒருவர் சின்மயி. பாடகி மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞர்களில் ஒருவரும் ஆவார். வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை MeToo மூலம் சின்மயி முன்வைத்தார்.

இதன்பின் இவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இதன்பின் தமிழில் டப்பிங் பேசாமல் இருந்து வந்த சின்மயியை, தடைகளை மீறி லியோ படத்தை திரிஷாவிற்கு டப்பிங் பேச வைத்தார் லோகேஷ் கனகராஜ்.

அம்மா இருக்கும்போது வைரமுத்து என்னை கட்டிப்பிடித்தார்.. தப்பான எண்ணம்! சின்மயி வெளிப்படை பேச்சு | Chinmayi Talk About Vairamuthu Issue

இதனால் சில சர்ச்சைகளும் எழுந்தன. சமீபத்தில் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘முத்த மழை’ பாடலை பாடினார். இது மிகவும் வைரலானது. இதன்பின் பலரும் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

சின்மயி பேட்டி


இந்த நிலையில், சின்மயி அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில், வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்ட விதம் குறித்து பேசியுள்ளார்.

”வைரமுத்து என்னை கட்டிப்பிடித்து அணைக்கும்போது, நான் அப்படியே உறைந்துவிட்டேன். இது என்னமோ தப்பா இருக்குனு தோணுச்சு. எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டேன். என் மூலம் வேளை செய்யவில்லை. பின் பதறியடித்து ஓடிவிட்டேன். என் அம்மா கீழே இருந்தாங்க.



என் அம்மா அங்கு இருக்கிறார் என்று தெரிந்துதான் அந்த ஆளு இப்படி செய்தார். அம்மா என்ன எப்போதும் தனியா விடமாட்டாங்க. மேலே தானேன்னு இருந்தாங்க. எனக்கு இப்படி நடந்தது என்று என் அம்மாவிடம் சொன்னேன். உன் கேரக்டர் என்னனு சோதிக்க இப்படி பன்றாரோ என்னவோ, இவங்க பெரிய ஆளுங்க, எது சொன்னாலும் கொலை கூட பண்ணிட்டு போய்டுவாங்க என என் அம்மா கூறினார்” என சின்மயி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். 

அம்மா இருக்கும்போது வைரமுத்து என்னை கட்டிப்பிடித்தார்.. தப்பான எண்ணம்! சின்மயி வெளிப்படை பேச்சு | Chinmayi Talk About Vairamuthu Issue

இது சின்மயி அளித்த பழைய பேட்டியாக இருந்தாலும், தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *