அன்று குடிப்பழக்கத்துக்கு அடிமை, இன்று 58 வயதில் 3 டிகிரி.. யார் இந்த நடிகர் தெரியுமா?

பொதுவாக வாழ்க்கையில் எப்போது எது நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அந்த வகையில், சினிமா நடிகர் ஒருவர் முன்பு மது பழக்கத்துக்கு அடிமையாகி பின் அதில் இருந்து மீண்டு இன்று 58 வயதில் கையில் 3 டிகிரி. சினிமாவிலும், நிஜத்திலும் சாதித்திருக்கிறார்.
அட இவரா?
அந்த நடிகர் யார் என்பது குறித்து தான் இந்த பதிவில் காண இருக்கிறோம். அவர் வேறுயாருமில்லை, காமெடி நடிகர் முத்துக்காளை தான்.
எந்த வயதிலும் படிக்கலாம், சாதிக்கலாம் என காட்டியவர்கள் பலர் உள்ளார்கள், அந்த லிஸ்டில் நடிகர் முத்துக்காளையும் உள்ளார். சண்டை மாஸ்டரான முத்துக்காளை சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தார்.
கடந்த 2017ம் ஆண்டு வரலாறு பாடத்தில் பி ஏ டிகிரி முடித்த முத்துக்காளை தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம், தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் படித்திருக்கிறார்.