அன்பே டயானா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
அன்பே டயானா
பாரி இளவழகன் கதை எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.
இப்போதெல்லாம் மதம், ஜாதி, மாநிலம், நாடு என எதையும் பார்க்காமல் காதலால் இணை
பழைய விஷயங்களை பின்பற்றும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் சுதந்திரமான சிந்தனையுடன் வாழும் ஆங்கிலோ-இந்திய பெண் ஒருவர் நுழையும் போது ஏற்படும் எதிர்ப்பாராத மாற்றங்களைச் சொல்கிறது அன்பே டயானா.
கலாச்சாரம் மற்றும் குடும்ப எல்லைகளைக் கடந்து மலரும் காதலின் சவால்களை அனைவருக்கும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய விதத்தில் இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.
ஓடிடி ரிலீஸ்
நடிகை ரோஜா, சேத்தன், யூடியூபர் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
கடந்த ஜுலை 17ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 28ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் அன்பே டயானா படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
