அனைத்தும் கவரிங் நகை தான்.. உண்மையை கூறிய மயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று

பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதன்பின், கோமதியின் அண்ணன்கள் முத்துவேல் மற்றும் சக்திவேல் உதவியால் அனைவரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.
ஜாமீன் பெற்று வெளியே வந்த நிலையில், அடுத்ததாக மற்றொரு பிரச்சனையை கொண்டு வந்துள்ளார் மயிலின் அம்மா. தங்கள் மகளுக்காக போட்ட 80 பவுன் நகையை மீண்டும் தரவேண்டும் என போலீஸிடம் வந்து புகார் அளிக்கிறார்.
இதன்பின், மயிலுக்கு போட்ட 8 பவுன் மட்டும் தான் தங்கம், மற்றவை எல்லாம் கவரிங் என மீனா கூறுகிறார். ஆனால், நாங்கள் போட்ட 80 பவுன் நகையுமே தங்கம்தான் என மயிலின் அம்மா கூறுகிறார்.
உண்மையை கூறிய மயில்
இந்த நிலையில், தங்கமயிலை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து உண்மையை கூறும்படி கேட்கிறார்கள். முதலில் தனது அம்மா சொன்னபடி 80 பவுனும் தங்கம் என பொய்யை கூறுகிறார்.
ஆனால், பின் மீனாவும், ராஜியும் தங்க மயிலிடம் உண்மையை கூறும்படி கேட்க, 8 பவுன் மட்டும்தான் தங்கம், மீதம் எல்லாமே கவரிங் என உண்மையை கூறுகிறார் மயில்.
உண்மை வெளிவந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மீது தவறில்லை என போலிஸுக்கு தெரியவர, மீதியை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என போலீஸ் அதிகாரி கூறுகிறார்.
இதன்பின், வீட்டிற்கு அனைவரும் சென்றதும், நகை பற்றிய உண்மையை ஏன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூறவில்லை என மீனா, ராஜி இருவரிடமும் கோபத்துடன் பேசுகிறார் கோமதி.






