அனகனக ஒக்க ராஜு (Anaganaga Oka Raju): திரை விமர்சனம்

அனகனக ஒக்க ராஜு (Anaganaga Oka Raju): திரை விமர்சனம்


நவீன் பொலிஷெட்டி, மீனாக்ஷி சௌத்ரி நடிப்பில் தெலுங்கில் வெளியாகியுள்ள அனகனக ஒக்க ராஜு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா.

அனகனக ஒக்க ராஜு (Anaganaga Oka Raju): திரை விமர்சனம் | Anaganaga Oka Raju Movie Review

கதைக்களம்



வாழ்ந்து கெட்ட ஜமீன்தாராக இருக்கும் ராஜு (நவீன்), ஊருக்கு அது தெரியக் கூடாது என நினைத்து மக்கள் முன் பணக்காரர் போல் நடிக்கிறார்.

அந்த ஊர் மக்களும் அவர் ஜமீன்தாராகவே மிடுக்கான வாழ்க்கையை வாழ்வதாக நம்புகிறார்கள்.



இந்த சூழலில் தனது சொந்தக்கார அத்தையால் திருமண வீட்டில் அவமானப்படுத்தப்படும் ராஜு, பெரிய இடத்து பெண்ணை திருமணம் செய்து இராஜ வாழ்க்கை வாழப்போவதாக சவால் விடுகிறார்.

அனகனக ஒக்க ராஜு (Anaganaga Oka Raju): திரை விமர்சனம் | Anaganaga Oka Raju Movie Review

அதற்காக அவர் பணக்கார பெண்ணை தேடும்போது சாருலதாவை (மீனாக்ஷி) சந்திக்கிறார். அவரும் ஜமீன்தார் குடும்பம் என்று அறிந்ததும், தன்னை காதலிக்க வைக்க பல வேலைகளை செய்கிறார்.



ஒரு வழியாக இருவரும் திருமணம் செய்துகொள்ள, அதன் பின்னர்தான் அவருக்கு அதிர்ச்சி உண்மை தெரிய வருகிறது.

அடுத்து அவர் என்ன செய்தார்? நினைத்ததுபோல் இராஜ வாழ்க்கை வாழ்ந்தாரா என்பதே மீதிக்கதை.  

படம் பற்றிய அலசல்



தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான நவீன் பொலிஷெட்டி முழுக்க முழுக்க கமர்ஷியல் ஹீரோவாக இப்படத்தில் களமிறங்கியுள்ளார்.

அதற்காக கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் தானே கையாண்டுள்ளார்.

வசனத்தில் எந்தளவு அவர் மெனக்கெட்டுள்ளார் என்பது ஒவ்வொரு வசனத்திலும் தெரிகிறது.

மாரி என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்தில் காமெடி அட்டகாசமாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

நவீன் பேசும் ஒவ்வொரு காமெடி வசனத்திற்கும் திரையரங்கில் சிரிப்பலைதான்.

அனகனக ஒக்க ராஜு (Anaganaga Oka Raju): திரை விமர்சனம் | Anaganaga Oka Raju Movie Review

அதற்கேற்றாற்போல் காட்சியமைப்புளும் உள்ளன.

குறிப்பாக ‘குறைந்தபட்ச அரசியல் அறிவு கூட இல்லாமல் எப்படிடா பேட்டி குடுக்குற, 10 பேர் போன பேரணி இல்ல, அது வாக்கிங்; போலீஸ் பாதுகாப்பு தரமட்டங்க..’ போன்ற வசனங்கள் குபீர் சிரிப்புதான்.



மீனாக்ஷிக்கு நடிப்பதற்கு பெரிய வேலை இல்லையென்றாலும் காமெடிக்கு பெரிதும் உதவியுள்ளார். அவர் கொடுக்கும் ட்விஸ்ட் செம காமெடி.

ராவ் ரமேஷ் உள்ளிட்ட பல நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை தர படம் முழுக்க சலிப்பில்லாமல் நகர்கிறது.

ஃபரியா அப்துல்லாவின் கேமியோ கூடுதல் சுவாரஸ்யம்.

அனகனக ஒக்க ராஜு (Anaganaga Oka Raju): திரை விமர்சனம் | Anaganaga Oka Raju Movie Review

சான்வி மேகனா ஒரு கிளாமர் பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டுள்ளார்; ஆனால் 3 நிமிடங்கள் கூட அந்த பாடலின் நீளம் இல்லை என்பது பலருக்கு ஏமாற்றமாக இருக்கலாம்.

முதல் பாதியைப் பொறுத்தவரை தமிழில் சந்தானம் நடிப்பில் வந்த படத்தின் கதை என்பது அப்பட்டமாக தெரிகிறது.

இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளை பல படங்களில் பார்த்த நினைவு வந்தாலும் சுவாரஸ்யமாக உள்ளன.

நவீன் மொத்த படத்தையும் ஜாலியான என்டெர்டெய்ன் ஆக கொண்டு செல்வதில் வென்றுள்ளார். மிக்கி ஜே.மேயரின் இசை கூடுதல் பலம். 

க்ளாப்ஸ்



நவீன் பொலிஷெட்டியின் நடிப்பு



காமெடி வசனங்கள்



திரைக்கதை



இசை



பல்ப்ஸ்



இரண்டாம் பாதியின் கதையில் அழுத்தத்தை சேர்த்திருக்கலாம்



மொத்தத்தில் இந்த அனகனக ஒக்க ராஜு சங்கராந்தி ரேஸில் வென்றுள்ளார். ஜாலியான ஒரு படமாக பார்க்கலாம்.

அனகனக ஒக்க ராஜு (Anaganaga Oka Raju): திரை விமர்சனம் | Anaganaga Oka Raju Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *