அந்த படத்தை தெரியாமல் பார்த்துவிட்டேன், தூங்கவே முடியவில்லை.. மணிகண்டன் ஓபன் டாக்

அந்த படத்தை தெரியாமல் பார்த்துவிட்டேன், தூங்கவே முடியவில்லை.. மணிகண்டன் ஓபன் டாக்


 மணிகண்டன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். இவர் விக்ரம் வேதா, காதலும் கடந்துபோகும் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் தோன்றி, பின் ஜெய் பீம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

அதன் பின், இவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த குட் நைட், லவ்வர் படங்கள் வெற்றிபெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

அந்த படத்தை தெரியாமல் பார்த்துவிட்டேன், தூங்கவே முடியவில்லை.. மணிகண்டன் ஓபன் டாக் | Manikandan About Horror Films

ஓபன் டாக் 

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் மணிகண்டன் பேய் படங்கள் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், “பேய் படங்களுக்கு நான் மிகவும் பயப்படுவேன். ‘அன்னாபெல்’ படத்திற்கு தெரியாமல் போய்விட்டேன். அந்த படத்தை பார்த்துவிட்டு என்னால் தூங்கவே முடியவில்லை.

அந்த படத்தை தெரியாமல் பார்த்துவிட்டேன், தூங்கவே முடியவில்லை.. மணிகண்டன் ஓபன் டாக் | Manikandan About Horror Films

எனக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் நான் எழுத்தாளராக எழுதிய முதல் படம் பீட்சா 2. பேய் படங்களில் நடிக்க வேண்டும், அந்த மாதிரி படம் எடுக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால், பார்க்க மட்டும் மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.    


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *