அது தான் நான் செஞ்ச தப்பு.. ஷங்கர் பற்றி தயாரிப்பாளர் தில் ராஜூ ஆதங்கம்

அது தான் நான் செஞ்ச தப்பு.. ஷங்கர் பற்றி தயாரிப்பாளர் தில் ராஜூ ஆதங்கம்


இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்ட படங்கள் எடுப்பதற்கு பெயர் பெற்றவர். ஆனால் அதற்காகவே தயாரிப்பாளரின் பணத்தை அதிகம் வீணடிப்பார் என்ற குற்றச்சாட்டும் நீண்டகாலமாக இருக்கிறது.

அவர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் இந்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருந்தது. ஆனால் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் தோல்வி அடைந்தது. அந்த படத்திற்காக 7 மணி நேர காட்சிகளை எடுத்து அதன் பின் அதை எடிட் செய்து 3 மணி நேரமாக குறைக்க சொன்னாராம் ஷங்கர். அதை அந்த படத்தின் எடிட்டரே சமீபத்தில் காட்டமாக பேசி இருந்தார்.

அது தான் நான் செஞ்ச தப்பு.. ஷங்கர் பற்றி தயாரிப்பாளர் தில் ராஜூ ஆதங்கம் | Dil Raju About Game Changer Flop

தில் ராஜு பேட்டி

இந்நிலையில் கேம் சேஞ்சர் தயாரிப்பாளர் தில் ராஜு அளித்த பேட்டியில் “ஷங்கர் போன்ற ஒரு பெரிய இயக்குனர் உடன் முன்பு நான் பணியாற்றவில்லை. கேம் சேஞ்சர் தான் நான் வைத்த தவறான படி.”

“படம் உறுதியானபோதே நான் கான்ட்ராக்டில் சில விஷயங்களை தெளிவாக குறிப்பிட்ட இருக்க வேண்டும். நான் அதை செய்யாமல் விட்டது தான் தவறு. ஒரு கட்டத்துக்கு மேல் பல விஷயங்கள் என் கையை விட்டு போய்விட்டது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.”

“இப்படி அடிபட்டு தான் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. இனி வருங்காலத்தில் உஷாராக இருப்பேன்” என தில் ராஜு கூறி இருக்கிறார். 

அது தான் நான் செஞ்ச தப்பு.. ஷங்கர் பற்றி தயாரிப்பாளர் தில் ராஜூ ஆதங்கம் | Dil Raju About Game Changer Flop


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *