அதற்காக ஊனமுற்றவரை நடிக்க வைக்க முடியுமா? ஹீரோயின் பற்றி கேட்டதற்கு மாரி செல்வராஜ் அப்படி ஒரு பதில்

துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் பைசன் காளமாடன் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்திற்கு கலவையான ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கும்நிலையில், துருவ் விக்ரமின் நடுப்புக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகிறது.
ஹீரோயின்
வெள்ளையாக இருக்கும் ஹீரோயினை தேர்வு செய்து அவர்களுக்கு கருப்பு மேக்கப் போட்டு நடிக்கவைத்தது ஏன் என இயக்குனர் மாரி செல்வராஜிடம் கேட்டதற்கு, “அது ஒரு சாய்ஸ், ஊனமுற்ற கதாபாத்திரத்தில் நிஜத்தில் ஊனமுற்றவரை நடிக்க வைத்து துன்புறுத்த முடியுமா?”
“வெள்ளையாக இருப்பதால் தேர்வு செய்வது இல்லை, யார் அர்ப்பணிப்பு உடன் இருக்காங்களே அவங்களை தான் தேர்வு செய்கிறோம்” என மாரி செல்வராஜ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.