அஞ்சலி-சரவணன் காதலித்த விஷயம் மயில் வீட்டில் தெரிந்ததா?… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புதிய புரொமோ

சீரியல்கள்
சன் டிவி சீரியல்களில் கடத்தல், கொலை என இப்படியே இருக்க விஜய் டிவியில் ஒரே விவாகரத்து பிரச்சனையாகவே உள்ளது.
சிறகடிக்க ஆசை, மனோஜ்-ரோஹினி விவாகரத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சரவணன்-மயில் விவாகரத்து, அய்யனார் துணை நிலா-சோழன் விவாகரத்து, சின்ன மருமகள் சேது-தமிழ் விவாகரத்து பிரச்சனை கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்தது.
விஜய் டிவியில் இது விவாகரத்து வருடமாக மாறிவிடுமோ என தெரியவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
கோமதி-பாண்டியன் சண்டை கடந்த 2,3 நாட்களாக பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
தற்போது சீரியலின் புதிய புரொமோவில், சரவணன்-அஞ்சலி கோவிலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போது, அவர்களது நண்பர் ஒருவர் அவர்களை பார்த்து நீங்கள் இருவரும் காதலித்தீர்கள் தானே, வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை தானே. நீங்கள் இருவரும் சேர வேண்டும் என இருந்திருக்கிறது, அதனால் தான் இப்போது சந்தித்துள்ளீர்கள் என கூறிவிட்டு செல்கிறார்.
அந்த நேரம் அவர்கள் பேசியதை கேட்டுவிடுகிறார் மயிலின் அப்பா மாணிக்கம். அடுத்து என்ன நடக்குமோ பொறுத்திருந்து காண்போம்.






