அஜித் எனக்கு இன்னொரு அப்பா.. முன்னணி இயக்குனர் உருக்கம்

நடிகர் அஜித்துக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. பல சினிமா நட்சத்திரங்களே அவருக்கு ரசிகர்கள் என்பதை வெளிப்படையாக கூறி இருக்கின்றனர்.
தற்போது குட் பேட் அக்லீ பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திர அஜித் தனக்கு இன்னொரு அப்பா என உருக்கமாக பேசி இருக்கிறார்.
இன்னொரு அப்பா..
நான் இந்த நிலையில் இருப்பதற்கு அஜித் தான் காரணம். ஒருவர் 0 – ஆக இருக்கும்போது அவரை நம்பலாம், ஆனால் மைனஸில் இருக்கும் ஒருவரை நம்புவது சாத்தியமற்ற ஒன்று.
அதை சாதாரணமாக யாராலும் செய்ய முடியாது. அஜித்தும் எனக்கு இன்னொரு அப்பா தான் என ஆதிக் பேசி இருக்கிறார்.
அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் தான் இயக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.