அஜித், ஆதிக் ரவிச்சந்திரனின் புதிய படத்தை தயாரிக்கப்போவது இவர்களா?… வெளிவந்த விவரம்

நடிகர் அஜித்
சினிமாவில் ஒரு கூட்டணி வெற்றிப் பெற்றுவிட்டால் அவர்கள் மீண்டும் மீண்டும் இணைவார்களா என்று தான் ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்.
அப்படி சமீபத்தில் புதிய கூட்டணி அமைந்து ஹிட்டடித்த படம் தான் குட் பேட் அக்லி.
அஜித்-ஆதிக் ரவிச்சந்திரன் முதன்முறையாக இணைந்து வெற்றிக்கண்ட படம் தான் குட் பேட் அக்லி, படம் செம மாஸான வரவேற்பை பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்த வருடத்தின் ஹிட் பட வரிசையில் இப்படம் டாப்பில் உள்ளது.
தயாரிப்பாளர்
குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய மீண்டும் அஜித்-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி அமைத்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடத்தில் இருந்து தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் இப்படத்தை தயாரிப்பவர் குறித்து தகவல் வந்துள்ளது.
அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை விநியோகம் செய்த ரோமியோ பிக்சர்ஸ் தான் AK 64 படத்தை தயாரிக்க இருக்கிறார்களாம்.